• சற்று முன்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள்! ராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வு



    கலவை பகுதியில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தங்கியுள்ள  கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி செய்துகொடுத்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்படி, மாவட்டத்தில் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 2,979 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,574 பேர் குணமடைந்துள்ளனர். 

    இது போக 2,151பேர் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் 126 கொரோனா தொற்று நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து
    கொடுக்கப்படவில்லை  என்று வாட்ஸ்–அப்பில் வதந்தி வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினியின் உத்தரவின் பேரில் சார்  ஆட்சியர்  இளம்பகவத், வட்டாட்சி யர் காமாட்சி ஆகியோர்  ஆதிபராசக்தி கல்லூரிக்குநேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, வெந்நீர் குடிப்பதற்கு தேவையான எந்திரத்தை வட்டாட்சியர்  காமாட்சி வழங்கினார்.பின்னர், அருகில் உள்ள மகாலட்சுமி கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்தார். அங்கு புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ள 100 படுக்கைகள் வசதிகளை அவர் பார்வை யிட்டார். அவருடன் உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் இருந்தனர். 

    எமது செய்தியாளர்  : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad