ஆற்காட்டில் பள்ளி மாணவியை கடத்திய கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோனார் தெருவைச் சேர்ந்த தம்பதியர் ஆறுமுகம் – அன்னலட்சுமி. இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். சென்ற வருடம் பத்தாம் வகுப்பு முடித்த மாணவி, அந்த சமயத்தில் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரெங்கநாதன் (வயது 22) என்ற வாலிபரை காதலித்ததாகதெரிகிறது. ரெங்கநாதன் கார் டிரைவராகபணியாற்றி வருகிறார். மாணவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை ஆற்காட்டில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு பெற்றோர் அனுப்பிவிட்டனர். அங்கிருந்தபடி இந்த வருடம் மாணவி பிளஸ்+1 முடித்துள்ளார்.ஆனால், ரெங்கநாதனுடனான காதலை மாணவி தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 14–ம் தேதி மாணவிதிடீரெனமாயமானார்.இதுகுறித்து 18–ம் தேதி ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்– இன்ஸ்பெக்டர் அருண்ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இதுபற்றி மற்ற ஊர் காவல்நிலையங்க ளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை போலீசாருக்கு மாணவியை பற்றிதகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாயமான மாணவி சென்னையில் நடமாடியுள்ளார். அங்குள்ள போலீசார் மாணவியையும், ரெங்க நாதனையும் பிடித்து வைத்து இதுபற்றி ஆற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் அழைத்து வந்த ஆற்காடு போலீசார் ரெங்கநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்து மாணவியை பெற்றோரிடம் ஒப்ப டைத்தனர்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை