தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுமார் 30 பேர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் அவர்களின் கோரிக்கையானது கொரோனா பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 15,000 ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்
இதில் வேலூர் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த தலைவர் மேச்சாரியார் கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் சேட்டு பொருளாளர் கங்கா ஆகியோர் தலைமையில் திரளாக கலந்து கொண்டு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 450 க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் இவர்கள் இன்று ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை