Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வைப்பார் பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

    அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்புதூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வைப்பார் கிராமம் சர்வே நம்பர் 989 இல் அமைந்துள்ள உப்பளங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைப்பு செய்வதற்காக நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் வைப்பார் கிராமம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் வசித்து வரும் 110 குடும்பங்கள் அப்பகுதியில் உப்பளங்கள் அமைத்து மூன்று தலைமுறைகளாக தொழில் செய்து வருவதால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் அழியும்  எனக்கூறி அப்பகுதி மக்கள் உப்பளங்களில் திரண்டு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


    இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருப்பதால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை போலீசார் செய்தி சேகரிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad