• சற்று முன்

    ராணிபேட்டை போலிசாருக்கான சிறப்பு கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது



    ஆற்காடு அடுத்த வேப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இரவு 7 மணிக்கு நடந்த போலீசாருக்கு நிலையான வழிமுறைகள் நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி மயில்வாகனன் முன்னிலை வகித்தார் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக டிஐஜி காமினி பேசியதாவது போலீசாரும் பொது மக்களுக்காக தான் இருக்கிறோம் 


    நாம்  எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற உரிமை இல்லை அவர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் சரி சட்டத்தில் வரை முறைப்படித் தான் அவர்களை வழி நடத்த வேண்டும் போலீசார் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு பேசினார் ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன் பேசுகையில் இப்போதைக்கு என்ற யுத்தத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து போலீசார் நாம் ஒரு மக்கள் சேவகன் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும் என்று பேசினார் இதில் ராணிப்பேட்டை மாவட்ட டிஎஸ்பிக்கள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்  எஸ்.எஸ்.ஐ.கள் என மொத்தம் 113 பேர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி பூரணி நன்றி கூறினார்.


    ஆ.ஜே.சுரேஷ் குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad