மனநிலை பதித்த மூதாட்டியால் பேத்திகள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் என்னும் பகுதியில் வசித்து வருபவர் வள்ளி. இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவரது மகளின் பெயர் கீர்த்தனாவுக்கு திருமணம் ஆகி அமுதவல்லி ( 2 ), ரிஷிகா என்னும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கீர்த்தனா அம்மா வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். இவர் நேற்று வழக்கம் போல குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டு தூங்கியுள்ளார்.
இன்று காலை எழுந்து பார்த்த போது அருகில் குழந்தைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர், தனது அம்மாவிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது வள்ளி ஒழுங்காக பதில் சொல்லவில்லையாம். இதனால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். இதனிடையே தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். போலீசார் வந்து வள்ளியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து உதயமாம்பட்டு பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு தீயணைப்பு துறையினருடன் சென்ற போலீசார், குழந்தைகளின் சடலத்தை மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றியதாக கூறப்படும் வள்ளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை