பணியில் உயிரிழந்த ஊழியரின் மகனுக்கு மாவட்ட ஆட்சியர் பணி சான்றிதழ் வழங்கினார்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலம் பேரூராட்சி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து பணி இடையில் காலமான பூ. கனகசபை (வயது 57) என்பவரின் வாரிசுதாரரும் மகனுமான க. விக்னேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் சோளிங்கர் பேரூராட்சியில் வரித்தண்டலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி அவர்கள் வழங்கினார்கள். உடன் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) சி.அம்சா மற்றும் உதவியாளர் கி. அர்ச்சுனன் ஆகியோர் உடனிருந்தனர்
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை