வேலூர் மாவட்டத்தில் அலோபதி சிகிச்சை அளிக்க யுனானி டாக்டர் கைது..
வேலூர் மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் கிளினிக் நடத்தி வருவதாக பெண்ட்லெண்ட் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் கிஷோர் குமாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நகரின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் கிளீனிக்குகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர் அதன்படி கொண வட்டத்தில் நடத்திய ஆய்வில் அதே பகுதியை சேர்ந்த குல்னாஸ்ரூஹி 30 என்பவர் யுனானி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் மேலும் கிளினிக்கில் இருந்து ஆங்கில மருந்துகள் ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் வேலூரில் போலி மருத்துவர்கள் யாரேனும் உள்ளார்களா என ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை