உடற்பயிற்சி கூடம் துவக்கம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நிர்வாக காரணங்களுக்காக தமிழக முதல்வர் அவர்களால் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாம்பசிவபுரம் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இப்பகுதி மலை குன்றுகளை ஒட்டி இருப்பதால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்குள்ள சில குடும்பங்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் மதுவிலக்கு கரும்புள்ளி கிராமமாக கருதப்பட்டது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று காவல்துறையினர் மூலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் கடந்த 10.01.2020 ஆம் தேதி சுமார் 115 காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மூலமாக மிகப்பெரிய சாராய தணிக்கையை வேட்டை நடத்தி அதில் 12 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் பல சாராய ஊழல்களும் அளிக்கப்பட்டன.
கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிப்பதற்காக தொடர்ந்து எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையின் மூலமாக 22.01. 2020 ஆம் தேதி பிரபல கள்ளச்சாராய வியாபாரி பண்ணு குமார்( எ) குமார் தான் செய்த தவறை உணர்ந்து திருந்தி மறுவாழ்வு வாழ்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரிடம் சரணடைந்தான் மேலும் சாம்பசிவபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களைச் சேர்ந்த கள்ளச்சாராயம் காய்ச்சி மற்றும் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் திருந்தி மறு வாழ்வு வாழ உள்ளதாக ஊர் பொதுமக்கள் மூலமாக கோரிக்கை வைத்தனர் இதன் தொடர்ச்சியாக 27. 01. 2020 ஆம் தேதி அன்று சாம்பசிவ புரத்தை சேர்ந்த அருள் வெட்டி முருகன் உள்பட மொத்தம் 40 நபர்களுக்கும் திமிரி சேர்ந்த5 நபர்களும் காவனூர் 2 நபர்களும் கருங்காலி குப்பம் பரதராமி மகான் குடிசை வெங்கடாபுரம் தானா குளம் தலா ஒரு நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்கள் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் செய்துவந்த தவறான தொழிலில் இருந்து திருந்தி மறுவாழ்வு வாழ உறுதி உறுதி கொண்டனர்
அந் நிகழ்வின் போது கிராமங்களிலுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நன்றாக படித்து அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் மேலும் இளைஞர்களை மேம்படுத்துவதற்காக நூலகம் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்துக் கொள்ளப்பட்டது அதைத்தொடர்ந்து யாரும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க கிராம கமிட்டி ஏற்படுத்தப்பட்டு அவர்களும் காவல்துறையும் தொடர்ந்து கண்காணிப்பு ஆலோசனை மற்றும் வளர்ச்சி விஷயங்களில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் அடுத்தகட்டமாக 22/ 7/ 2020 மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் உடற்பயிற்சி கூடம் துவக்கம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் வாலாஜா வட்டாட்சியர் பாக்கியநாதன் ராணிப்பேட்டை உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி ஆற்காடு ஆய்வாளர் ஆனந்தன் ஆய்வாளர் திமிரி ஆய்வாளர் காண்டீபன் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டன
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை