ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார் பின்பு வன்னிவேடு மோட்டூர் பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனை முகாமை ஆய்வு செய்து மருத்துவ பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வைரஸ் தொற்று பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறினார்
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலு மற்றும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்..
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை