Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டையில் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்.....



    ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுலா கார் வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் அனைத்திந்திய டிரைவர்கள் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவா மாவட்ட தலைவர் விஜயன் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட  இ.பாஸ்  முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்


    டிரைவர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வழங்கக் கோரியும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும் சுங்கச்சாவடிகளில் நடக்கும் விதிமீறல்கள் டீசல் விலை உயர்வை கண்டித்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அனைத்து வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது தகவலறிந்த ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். 

    எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad