• சற்று முன்

    பழனி நகராட்சி காந்தியடிகள் தினசரிஅங்காடிகள் மூடல்


    பழனி காந்திமார்க்கெட்டில் கடைவைத்துள்ள வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதால் காந்தி மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்கும் வகையில் இன்று ஒருநாள் கடைகள் மூடப்பட்டது. 



    திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவாங்கர் தெருவில் வசித்துவரும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அழைத்துச்செல்லப் பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் பழனி காந்தி மார்க்கெட்டில் மளிகைக்கடௌ நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பழனி காந்தி மார்க்கெட்டில் அவரது கடை அமைந்துள்ள பகுதியை சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து காந்தி தினசரி மார்க்கெட்டை இன்று ஒருநாள் மட்டும் அடைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இன்று கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. மூடப்பட்ட காந்தி மார்க்கெட் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிறுமிநாசினி  தெளிக்கப்பட்டு வருகிறது. நாளைமுதல் தொடர்ந்து காந்தி மார்க்கெட் செயல்பட அதிகாரிகள்‌ அனுமதித்துள்ளனர்


    எமது செய்தியாளர் : சரவணா குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad