• சற்று முன்

    வாலாஜாபேட்டை அருகே பைக் மீது வேன் மோதி டிரைவர் பரிதாப சாவு


    வாலாஜாபேட்டை அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் வந்தவர்  பரிதாபமாக உயிரிழந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் ஒரு கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் அசோகன் (வயது 35). பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த இவருக்கு ரேகா என்ற மனைவி இருக்கிறார். வாலாஜாபேட்டை அடுத்த புலித்தாங்கல் என்ற பகுதியில் உள்ள மாமியாரின்  வீட்டில் தற்போது அசோகன் தனது 
    மனைவியு டன் வசித்து வந்துள்ளார்.
    இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு கல்குவாரியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் அசோகன் புறப்பட்டுச் சென்றார். சென்னை - பெங்களூர்  நெடுஞ்சாலையில் முசிறி கூட்டு ரோடு பகுதியில் சாலையை கடந்தபோது, சென்னையில் இருந்து வேலூரை நோக்கி சென்ற வேன் ஒன்று அசோகனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அசோகன் படுகாயமடைந்தார். அவரை ஆம் புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜாபேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
    வருகிறார்.

    எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad