லிகாய் எல்.ஜ.சி.முகவர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டையில் மருத்துவ முகாம்....
நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி மருந்தை எல்.ஜ.சி. முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இராணிப்பேட்டை எல்ஐசி கிளையில் நடைபெற்றது கிளை தலைவர் ரத்னம்ஜெயக்குமார் தலைமை தாங்கினார் ரவிக்குமார் செளரியநாதன் மோகனரங்கம் மணிமாறன் முன்னிலையில் கிளை மேலாளர் முத்தையன் துவக்கி வைத்தார். முகாமிற்கு கிளை பொருளாளர் ஏழுமலை வரவேற்புரையாற்றினார். மருத்துவர் ஆர்.பாபுஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மருந்தை பற்றி விளக்கமளித்தார் .
எழுத்தாளர் சங்கம் சரவணன் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார் லிகாய் வேலூர் கோட்டை பொதுச் செயலாளர் வெங்கடேசன் மருத்துவர் பரசுராமன் எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேந்திரன் திரைப்படக் கலைஞர் இரஜினி துணை செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்..
இந்நிகழ்ச்சியில் திரளான முகவர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை