பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டதில் குதித்த தொழிற் சங்கங்கள்
...
அகில இந்தியா தொழிற்சங்கங்கள்வுடன் இணைந்து SDPIகட்சியின் தொழிற்சங்கமான SDTU இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது இதில் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக SDTU ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களிலும் மேல் விஷாரத்தில் நகரத்தில் 1 இடத்திலும் ராணிப்பேட்டை நகரத்தில் 1 இடத்திலும் மொத்தம் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது SDTUவின் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சையத் சலீம் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் காதர் பாஷா, அஷ்ரப், ஜாபர் நாசிர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்களாக SDTU மாநில துணைத் தலைவர் முஹம்மது ஆசாத் மற்றும் SDPIகட்சியின் மாவட்ட தலைவர் பையாஸ் அஹ்மது, மாவட்ட பொதுச்செயலாளர் பஷீர் அஹ்மது, வேலூர் தொகுதி நிர்வாகிகள் கலீல், அபூபக்கர், ரியாஸ் ரஹ்மான், வர்த்தகர் அணி மாவட்ட நிர்வாகி சுலைமான், மேல்விஷாரம் நகர தலைவர் தமீம், ராணிப்பேட்டை நகர தலைவர் பிலால். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக ஆங்காங்கே கலந்து கொண்டனர். SDTUவின் அனைத்து ஆட்டோ ஸ்டாண்டின் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் ஏராளமான பொதுமக்கள் அங்கங்கே நின்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை