• சற்று முன்

    திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை



    ஆற்காடு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக சப் கலெக்டர் விசாரணை நடத்துகிறார் ஆற்காடு மாசிலாமணி நகரை சேர்ந்தவர் சரவணன் 30 இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார் இவருக்கும் ஆற்காடு அடுத்த கட்சியை சேர்ந்த ஹேமாவதி 23 என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது இந்நிலையில் ஹேமாவதி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார் எதற்காக பக்கத்து வீட்டுக்கு சென்றார் என கேட்டு சரவணன் திட்டி அடித்தாராம் இதனால் மனவேதனை அடைந்த ஹேமாவதி இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் என்பது திருமணமான 6 மாதங்களே ஆனதால் சப் கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 


    எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad