தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!
அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துகடை எம்.பி.டி.ரோட்டில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்து கண்டனம் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர் இதில் மாவட்ட தலைவர் சரவணன் மாவட்ட செயலாளர் பூபாலன் மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கார் ஆட்டோ டெம்போ மினி டெம்போ 60க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் வேன் ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் கலந்து கொண்டு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்
இதில் தவணையை வட்டியை ரத்து செய்யக் கோரியும், வரலாறு காணாத டீசல் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், பேரிடர் கால சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஓட்டுனர்களுக்கு பேரிடர் கால நலத்திட்ட உதவிகள் வழங்க வலியுறுத்தியும், ஓட்டுனருக்கு என்று தனி வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலம் பேரிழப்பு வழங்கிட வேண்டும் எனவும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், போக்குவரத்து காவல்துறையின் பொய்யான வழக்குகளை கண்டித்தும்,பழைய வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்வதை கண்டித்தும், ஒருநாள் ராணிப்பேட்டை மாவட்ட முத்து கடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் வாகன ஓட்டுனர்கள் வாகன உரிமையாளர்கள்
திரலாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை