Header Ads

 • சற்று முன்

  திருப்பத்தூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் கொடுத்த டார்ச்சரில் தீ குளித்த வாலிபர்


  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணியில் இருந்த காவலர்  அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி டார்ச்சர் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவர் மஜ்ஹருல் உலூம் மேனிலைப்பள்ளி அருகே சென்ற போது அவரை நிறுத்தி அவரது வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறார். வண்டியை கொடுங்க அய்யா நான் சென்று விடுகிறேன் என்று முகிலன் எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் அங்கிருந்த போலிஸ் வாகனத்தை கொடுக்கவில்லை.  இதனால் விரக்தியடைந்த  முகிலன்  வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றிக் கொண்டு தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார்., இந்நிலையில் அவர் 90% தீக்காயங்களுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீக்குளித்த முகிலனுக்கு நீலா என்கிற மனைவி மற்றும் பிரசன்னா, ஜனனி, பிரிதரிஷினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் ஆம்பூரில் உள்ள பரிதா என்கிற ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததார். தன்னைத்தானே எரித்துக்கொண்ட முகிலன் போலிசார் தான் இதற்கு காரணம் என்று திரும்ப் திரும்ப கத்தி கதறினார். சும்மா போறவனை நிற்கவச்சி போலிசு வண்டிய பிடுங்கிட்டாங்க நான் எரித்துக்கொண்டேன்!  என்று துடிதுடித்தார்.

  முகிலனின் வாகனத்தை மடக்கி டார்ச்சர் செய்த காவலரின் பெயர் சந்திரசேகர். அவர் சற்று அப்படி இப்படி ஆள் தானாம். ஏற்கனவே ஊரடங்கு சமயத்தில், பலரை மிரட்டி பணம் வாங்கினார் என்பதற்காக ஆதுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அது மட்டுமின்றி மேலும் பல புகார்கள் அவர் மீது உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து அறிந்த வேலூர் சரக டிஐஜி காமினி  மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களும் நேரில் விசாரணை நடத்தினர்.

  இந்த விசாரணையின் போது ஆம்பூர் நகர காவல் நிலைய பராமரிப்பில் மேற்படி இடத்தில் உள்ள சி.சி.டி.வி.கேமிரா ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  மேலும் முகிலன் தீக்குளித்த சம்பவத்தால், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆம்பூரை சுற்றிலும் மூன்று டி.எஸ்.பிக்கள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், பத்து எஸ்.ஐ,க்கள் மற்றும் நூற்றுகணக்கான போலிசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  காவல் துறையினர் பொதுமக்களை டார்ச்சர் கொடுக்கும் செயல் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போலிசார் செய்யும் இது போன்ற உயிர்பறிப்பு சம்பவத்துக்கு உயர் அதிகாரிகள் பாரமட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சும்மா ஆயுதப்படைக்கு மாற்றுவதும் மறுநாளே இருந்த இடத்துக்கே வந்துவிடுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆகவே முகிலன் தீக்குளிப்புக்கு காரணமான காவலர் சந்திரசேகர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.இந்த சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் 5 போலீசார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


  எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார் 

  கருத்துகள் இல்லை