வேலூர் மாவட்டத்தில் மருத்துவர் உட்பட 96 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவர் உட்பட 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா வேகமாக பரவி வருகிறது. 90 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும் பாலானோர் சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று அரசு மருத்துவர் மற்றும் நகைக்கடை ஊழியர்கள் 3 பேர் உட்பட 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை