காவேரிப்பாக்கத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை சீரழித்த காம கொடூரனை போலீசார் போக்சோவில் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாகம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் 10 ஆம் வகுப்பு மாணவி,இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றதையறிந்த பக்கத்து தெருவில் வசிக்கும் சரவணன் (25), என்பவர் மாணவியின் வீட்டில் நுழைந்துள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவியை அந்த காமகொடூரன் சீரழித்துள்ளான். இதையறிந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதன் மீது வழக்கு பதிந்த போலீசார் காமகொடூரன் சரவணனை போக்சோவில் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் சரவணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கொரோனா காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை