• சற்று முன்

    அதிரடி சோதனை நடத்தியதில் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்


    வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்திரவின் படி வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன்(தலைமையகம்) அவர்களின் தலைமையில் வேலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, ALGSC காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வேலூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன், குடியாத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தசாரதி, வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செந்தில், குமாரி, குடியாத்தம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லட்சுமி, மற்றும் 8 காவல் உதவி ஆய்வாளர்கள் ,45 காவல் ஆளினர்கள் மொத்தம் 60 பேர் கொண்ட தனிப்படையினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேக்குமரத்தூர், தூங்குமலை, பலாம்பட்டு,  செங்காடு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் 5 நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 


    மேலும், செங்காடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(50) S/O வெள்ளையாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், சோதனையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது  மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் அவர்கள் கூறுகையில் இதுபோன்ற சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


    எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad