கொரோனா தொற்றால் பாணாவரம் காவல் நிலையம் மூடல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காவல் நிலையத்தில் 6- பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் உடன் பணிபுரிந்த காவலர்கள் உட்பட பொதுமக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனா்.
பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர் உட்பட மூனறு பேருக்கும் நெமிலி காவல் நிலையத்தில் மூன்று காவலர் என 6 பேருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனோ தொற்று உறுதியாகி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டனா்.
இந்நிலையில் பாணாவரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் .... தலைமை காவலர்,,,,, காவல் நிலைய தூய்மை பணியாளர் நண்பர்கள் காவல் குழுவை சேர்ந்த நபர் என மேலும் நான்கு பேருக்கும் தொற்று உறுவாகி வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனையில் கொரோனோ சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பாணாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் உட்பட 29 பேர் பணியில் இருந்தாலும், 11- பேர் மட்டுமே காவல் நிலைய பணியில் இருந்து வந்துள்ளனா் . இந்நிலையில் இதில் 6 பேர் கொரோனோ தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மீதமுள்ள காவலர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்படி, அரக்கோணம் உட்கோட்ட துனை கண்கானிப்பாளர் அறிவுருத்துதலின் பேரில் காவல் நிலைய வளாகத்தில் சாமினா பந்ததல் அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், காவலர்கள் பொதுமக்களின் பாதுகாவலர்கள் என்பதை நிருபித்துள்ளனா் என ஓரு சிலர் பாராட்டுகின்றனா்.
கருத்துகள் இல்லை