• சற்று முன்

    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.



    கொரோனா வைரஸ் தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி  தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. 

    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக தலைவர்  விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், செந்தில் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ராஜா, மாநில இளைஞரணி அமைப்பாளர்  வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில்  காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ்,  மத்திய பாகம் காவல் ஆய்வாளர்  ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர்  மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் காமராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்  வெங்கடேஷ் மற்றும் வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad