Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகே வீட்டில் சாராயம் காட்சிய பெண் கைது



    திருப்பத்தூர் அருகே வீட்டில் சாராயம் காட்சிய பெண் , 500 லிட்டர் சாராய உரல் அழிப்பு.‌ மாவட்ட எஸ்பி விஜயகுமார் அதிரடி நடவடிக்கை... திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் வேலூரில் இருந்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது அதற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் என்பவர் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில். திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட எஸ்பி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய யுக்தியைக் கையாண்டார். 

    அதனை எடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரளவுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பனை செய்வதும் கட்டுக்குள் இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லபள்ளியில் நவநீதம் என்ற பெண் தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து நவநீதம் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அந்தப் பெண்மணி தனது வீட்டில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சு இருப்பது தெரியவந்தது. அதனை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் விற்பனைக்காக 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் அருகில் உள்ள ஏரியில் சாராயத்தை அழித்தனர். அதன்பின் நவநீதம் என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் ஒரு சில கருப்பு ஆடுகள் துணையுடன் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது



    ஆர்.ஜே.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad