• சற்று முன்

    நாட்றம்பள்ளி அருகே 35 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருட்டு! போலீசார் விசாரணை!



    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வீராகவுண்டனூர் பகுதியை
    சேர்ந்தவர் அரசுகுமார்(39) ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் குடும்பத்துடன் வீட்டில் இரவு உறங்கிக்  கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து  இரண்டு பீரோக்கலையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் மதிப்பிலான தங்க நகை மற்றும் ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.



    விடியற்காலை அரசுகுமார் எழுந்து பார்த்த பொழுது அனைத்து பீரோக்களில் உடைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தது அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் அக்கம் பக்கத்தினரா? அல்லது உண்மையில் மர்ம நபர்களா? கொள்ளையடித்து சென்றனர் என்ற நோக்கில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடும்பத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் கானொலி காட்சியை nms today சேனலை பார்க்கவும் 

    எமது செய்தியாநித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad