ஆற்காட்டில் கோவிட்-19 சித்த மருத்துவ முகாம் துவக்க விழா
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ( COVID - 19 ) கொரோனா வைரஸ் நோய் தொற்று புதிய பரிசோதனை ஆய்வகத்தினை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணையின்படியும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக ரூ .1.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ( Covid - 19 ) கொரோனா வைரஸ் தொற்று நோயை கண்டறியும் புதிய பரிசோதனை ஆய்வகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார் .
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்ஷினி. தலைமை தாங்கினார் . தமிழகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுத்தி தமிழக முதல்வர் அவர்கள் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள் . இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகப்படியான பரிசோதனை மையங்கள் உள்ளது . தமிழ்நாட்டில் 112 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றது .
இவற்றில் 57 அரசு மருத்துவமனைகளிலும் 55 தனியார் மருத்துவமனைகளிலும் RT - PCR பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளது .
இம்மையத்தில் மாதிரி சேகரிப்பு அறை , RNA பரிசோதனை அறை , RNA மறு உருவாக்கம் பரிசோதனை அறை , PCR பரிசோதனை அறை மற்றும் கணினி பதிவு அறைகள் உள்ளது . இந்த ஆய்வகத்தில் அனைத்து விதமான நுண்கிருமிகளின் தொற்று தொடர்பான பரிசோதனைகளையும் ஆய்வு செய்ய முடியும் . தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனை முடிவுகளை பெற சென்னை , வேலூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பரிசோதனை அறிக்கை கிடைக்க கால தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும் . இந்த புதிய ஆய்வகத்தில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் 10 பணியாளர்கள் பணிபுரிவார்கள் . தினமும் சுமார் 300 முதல் 500 ) வரை பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் .
பணியாளர்கள் விரைவில் பணியமர்த்தப்பட்டு மையம் முழு வீச்சில் செயல்படும் . இதனால் உடனுக்குடன் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்துக்கொள்ளலாம் மேலும் இந்த ஆய்வகத்தில் மரபணு சம்மந்தமான நோய்கள் மற்ற அனைத்து வகை வைரஸ் நோய்கள் குறிப்பாக டெங்கு , சார்ஸ் பறவைச் காய்ச்சல் , பன்றிக்காய்ச்சல் ஆகியவைகளையும் மிக துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறியலாம் .
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், சட்டமன்ற உறுப்பினர்கள் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி,சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.பூரணி, இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மருத்துவர். யாஸ்மின், மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மணிவண்ணன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. வேல்முருகன், மாவட்ட கொரோன தடுப்பு அலுவலர் மரு.பிரகாஷ் ஐயப்பன், வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சிங்காரவேலன், மேலும் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை