வாலாஜாபேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏசி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்
வாலாஜாபேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏசி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அந்தலைரோடு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரபு (35). திருமணம் ஆகாத இவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலை யில், மாலையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு பிரபு சென்றுள்ளார். அங்குள்ள அரசு பள்ளியையொட்டி வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பிரபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் உதயசூரியன், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாதன்,வெங்கெட்ராமன் ஆகியோர் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து
வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை