• சற்று முன்

    கோவில்பட்டியில் விசாரணை கைதிகள் இறப்பு - மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்


    கோவில்பட்டியில் உள்ள கிளை சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்கஸ்  இருவரும் உடல்நலக்குறைவு என்று கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு பென்னிக்ஸ் உயிரிழந்தார்.  

    இன்று காலையில் அவரது தந்தை ஜெயராஜ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இருவர் மரணத்திற்கும் சாத்தான் குளம் போலீசார் தான் காரணம் என்றும், இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad