Header Ads

  • சற்று முன்

    "ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு????



    ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் குறைந்த அளவிளான பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. ராணிப்பேட்டையில் நேற்றைய நிலவரப்படி 470 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 290 பேர்  குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். 

    இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்கள், பால் நிலையங்கள் உளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட எல்லைக்குள் இ.பாஸ் இன்றி நுழைய முயன்றால் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

    மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதி இன்றி வந்துள்ளவர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக்கூறியுள்ள ஆட்சியர் திவ்யதர்ஷினி, கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் 


    எமது செய்தியாளர் : சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad