வாலாஜாவில் மின்வாரிய ஊழியருக்கு கொரானா மின்வாரிய அலுவலகம் மூடல்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொடர்ந்து கடந்த சில நாட்களாக உச்ச கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது சென்னை மற்றும் வெளியூரிலிருந்து வரும் நபர்களால் நோய் தொற்று அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது இதனால் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் ஆனாலும் ஒரு சிலர் இ பாஸ் முலம் மற்றும் அனுமதியின்றி மாவட்டத்திற்குள் உள்ளே வந்து விடுகின்றனர் இதனை கட்டுப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது இந்நிலையில் வாலாஜாவில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதனால் இந்த மின்வாரிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எமது செய்தியாளர் :ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை