கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபிரியா நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சம்பத்து ராயப்பேட்டை பகுதியில் 67 பேருக்கு உறுதியானது இவர்களில் 33 பேர் குணமாகி வீடு திரும்பினார் மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர் இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபிரியா சம்பத்து ராயப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார் அவருடன் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் உடன் சென்றனர் அப்போது அங்கிருந்த காவல்துறையினர் மருத்துவக்குழுவினர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இடம் குறைகளை கேட்டறிந்தனர்
சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அங்கிருந்து பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது மேலும் பொதுமக்களுக்கு தேவையான பால் ரொட்டி காய்கறி மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவற்றை தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென சிறப்பு அதிகாரி லட்சுமிபிரியா உத்தரவிட்டார் அரக்கோணம் ஆர்.டி.ஓ. பொறுப்பு பேபி இந்திரா மாவட்ட சுகாதார இயக்குனர் பொறுப்பு வேல்முருகன் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் டாக்டர் ரவி நெமிலி தாசில்தார் ரேவதி அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் நெமிலி பி.டி.ஓ. அன்பரசன் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி விஏஓ சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எமது செய்தியாளர் :ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை