மலைக்கிராம மக்கள் அமைத்த மண் சாலையில் அமைச்சர், அதிகாரிகளின் வாகனங்கள் செல்வதை காணலாம்
தற்காலிகமாக மண் சாலை அமைத்த மலைக்கிராம மக்களுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர். அப்போது மலைக்கிராம மக்களிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர். அப்போது மலைக்கிராம மக்கள், நாங்கள் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைத்ததன் மூலம் எங்களின் 73 ஆண்டுகளாக கனவு நிறைவேறியதாக, கூறினர். அதற்கு அமைச்சர்கள், மலைக்கிராம மக்கள் அமைத்த மண் சாலையை விரைவில் தார் சாலையாக அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவார்கள், என உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தி, பாஸ்கர், தாசில்தார் சிவபிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனிசாமி, நகர செயலாளர் சதாசிவம், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், பூங்குளம் மகேந்திரன், முன்னாள் ஜோலார்பேட்டை ஒன்றியகுழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எமது செய்தியாளர் :ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை