வாலாஜா அடுத்த தேவதானத்தில் வயிற்று வலியால் தற்கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானத்தில் பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வரும் ராமலிங்கம் மகன் முத்து 63 இரண்டு மகன்கள் நான்கு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நபர் ஆட்டு கறிக்கடை தொழில் செய்து வந்தார் கடந்த 7 மாதங்கள் முன்பு மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்து இருந்துள்ளது கடந்த 3 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை 3 மணி அளவில் அவர் வீட்டின் பின்புறம் உள்ள தேக்கு மரத்தில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் வாலாஜா நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
எமது செய்தியாளர் :ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை