கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து
கோவில்பட்டி கடலையூர் ரோடு தமிழரசன் திருமண மண்டபம் அருகே சி.ஆர்.டி. தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கிவருகிறது .இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவராஜ், அசோகன் என்ற இரு தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை