• சற்று முன்

    திருவாடானை அருகே மதுக்கடையை மூடக்கோரி மதுக கடையை முற்றுகையிட்ட பொது மக்கள்


    ராமாநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மதுபான கடை எண் 7019 உள்ளது. தற்போது திருவாடானை தாலுகாவில் கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டின் கீழ் தாங்களாகவே முன் வந்து இரண்டு மணிக்கு மேல் கடைகளை அடைத்து தாங்களும் வெளியில் சொல்லாமல் இருந்து வருகிறார்கள். 



    இந்நிலையில் மதுக்கடை மட்டும் திறந்து இருப்பதால் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் இங்கு வந்து செல்வதாகவும் அதனால் மேலும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் இன்று பொதுமக்கள் ஒன்று திரண்டு மதுகடையின் முன்பு அமர்ந்து கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..அதன் பின்னர் திருவாடானை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுதர்சன் மாவட்ட மதுபான கடை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நான்கு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    எமது செய்தியாளர் : ஆனந்தன் .L.V,.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad