போலீசார் தாக்கியதால் மனமுடைந்து எட்டயபுரத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
போலீசார் தாக்கியதால் மனமுடைந்து எட்டயபுரத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் - உறவினர்கள் பி,கணேசமூர்த்தியை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையாபுரம் மேலேதெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 29 வயது கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 20ம் தேதி எட்டயபுரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அந்த வழியில் சோதனையில் ஈடுபட்டடிருந்த 4
காவலர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
பின்னர் வீட்டுக்கு வந்த கணேசமூர்த்தி தனது மனைவி மற்றும் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார் கடந்த இரண்டு நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட கணேசமூர்த்தி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்நிலையில் அவரது உடல் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்ததோடு இதற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவியது இந்நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என கூறியதை மறுத்ததை தொடர்ந்து உறவினர்கள் காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்
கருத்துகள் இல்லை