விதியை மீறி பாசன கண்மாய்க்குள் ஆழமான மண் அள்ளி விவசாயிகளின் வழவதாரம் பாதிப்பதாக குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேளினிப்பட்டி பெரிய கண்மாயின் மூலம் வேளினிப்பட்டி, கொளுஞ்சிப்பட்டி, காட்டாம்பூர், தென்மாபட்டு, மின்னல்குடிப்பட்டி, அப்பாக்குடிப்பட்டி உள்ளிட்ட 6 கிராமத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நீர் பாசன மூலமாக பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேளினிப்பட்டி பெரிய கண்மாயில் குடிமராமரத்து பணியின் மூலமாக மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி கொடுத்து தற்போது சவடு மண் அள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கண்மாயின் நீர்வரத்தை தடுத்து 10 அடிக்கு மேல் மண் அள்ளுவதால் கண்மாயிக்கு நீர் வரத்து முற்றிலும் தடை படுவதாக குற்றம்சாட்டி வேளினிப்பட்டி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். JSR Infra என்கிற கம்பெனி நாற்கர சாலைக்கு கிராவல், ஒரு மீட்டர் ஆழம் தோண்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளுக்கு புறம்பாக சுமார் 10 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இதை கனிம வளத்துறை அளவை செய்து, அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டிற்கு தண்டத்தொகை விதிக்க வேண்டும் என கிராமத்தார்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
எமது செய்தியாளர் : சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை