உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கண்ணாடி கிளாஸ் மேல் அமர்ந்து யோகாசனம் செய்து அசத்தினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா பயிற்சி கழகம் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சங்க ஆலோசகர் சீனிவாசன் கண்ணாடி கிளாஸ் மேல் அமர்ந்து பத்மாசனம்,வஜ்ராசனம். உட்கடாசனம் .பாதகாஸ்தனம்.கோனாசனம் உள்பட பல்வேறு ஆசனங்கள் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி பின்பற்றி யோகா நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் கொரோனா காலகட்டத்தில் உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகப்பயிற்சியின் முக்கியத்துவத்தை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் அசோக் துணை தலைவர் அசோக்குமார். துணைச்செயலாளர் சந்திரக்கண்ணன் சுவாமி விவேகானந்தா யோகா பயிற்சியாளர் சுரேஷ் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சீனிவாசனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை