12 நாட்கள் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக தான் இருக்கும் என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு இன்று முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் 12 நாட்கள் ஊரடங்கு பொதுமக்களுக்கு சற்று கடினமாக தான் இருக்கும் இந்த சிரமங்களை தாங்கி கொண்டால் அடுத்து வரும் காலங்களில் நோய்த்தொற்று குறையும் இயல்பு நிலை அடைவோம், இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பாெதுமக்களுக்கு எதிரானவை அல்ல, என்று தெரிவித்தார்.
காவல்துறையின் கட்டுப்பாடுகள் கடுமையாக தான் தெரியும் நோய்த்தொற்று குறைய வேண்டும் என்பதால் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, மற்றபடி நாங்கள் பொதுமக்களின் நண்பன் தான் என்றார் அவர் , இது குறித்து மேலும் கூறிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே செல்வோர் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் மீது வழக்குகளும் பாயும் என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை