• சற்று முன்

    விளாத்திகுளத்தில் கவிழ்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப் மீட்பு உதவிக்கு வராத போலீசார் பொதுமக்கள் அதிருப்தி



    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் நுழைவாயில் முன்பு நேற்றிரவு 10 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகனம் அச்சு ஒடிந்து சரிந்தது. இதில் ஜீப் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்நிலையில் பழுதான போலீஸ் வாகனம் அப்பகுதியில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையம் நுழைவாயிலில் நின்று கொண்டிருப்பதால் பேருந்து நிலையத்திற்குள் நுழைய வேண்டிய அரசு பேருந்துகள் உள்ளே  நுழைய முடியாமல் பயணிகளை மெயின் ரோட்டில் இறங்கி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்
     ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுடைய வாகனம் அப்பகுதியில் சில நிமிடங்கள் நின்றால் உடனடியாக அப்புறப்படுத்த சொல்லும் போலீசார் தங்களது போலீஸ் வாகனத்தை 12 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தி வைத்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad