• சற்று முன்

    ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதி காவல்நிலைய ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.


    சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருப்பவர் புருஷோத்தமன். இவர் கடந்த 2 மாதத்துக்கு மேலாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காய்ச்சல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்குச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து அவருடன் பணியாற்றிய, உதவி ஆய்வாளர்கள் மற்றும் சக காவலர்கள் அனைவருக்கும் தொற்று குறித்து பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர் பணியாற்றிய காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad