.கோவில்பட்டி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிராக்டர் ஓட்டி சென்ற சின்னகருப்பசாமி(45), டிரைவர் சக்கரத்தில் சிக்கி பலியானார் இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த டிராக்டர் டிரைவர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை