• சற்று முன்

    சென்னையிலிருந்து பெங்களூருக்கு கடத்தி வந்த 22 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீஸார் மடக்கி பிடித்தனர்



    ராணிப்பேட்டை பகுதியில் லாரியில் கடத்தி வந்த 22 டன் ரேஷன் அரிசியை  போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராணி ப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனனுக்கு ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய ரகசிய தகவல் தெரியவந்தது.இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிப்பதற்கு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதில் சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கி லாரியில் கடத்தல் அரிசி செல்வதாக தகவல் தெரியவந்தது.


    அந்த லாரி ராணிப்பேட்டை  மற்றும் வாலாஜாபேட் டையை தாண்டி வேலூர் எல்லையை ஒட்டி சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த வாசுகிமற்றும் போலீசாருக்கு அந்த லாரியை பிடிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர். அரப்பாக்கம் பகுதியில் வைத்து அந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்தனர்.  லாரியில் 22 டன் ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad