Header Ads

  • சற்று முன்

    நூலகம் மற்றும் அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் திறந்து வைத்தார்


    இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் சில குடும்பங்கள் பனைமர கள் இறக்கிவிற்கும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கடந்த 15.03.2020 மற்றும் 24.03.2020 ஆகிய தேதிகளில் சுமார் 150 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் மிகப்பெரிய கள் சிறப்பு தணிக்கை வேட்டை நடத்தப்பட்டு சுமார் 4000 லிட்டர்கள் அழிக்கப்பட்டது.


    இதன் தொடர்ச்சியாக பொன்னம்பலம், கன்னிகாபுரம் ஆகிய கிராமத்தை சேர்ந்த சுமார் 50 நபர்கள் தாங்கள் செய்து வந்த தவறான தொழில்களில் இருந்து திருந்தி மறு வாழ்வு வாழ உறுதிகொண்டதின் பேரில் வருங்காலம் இளைஞர்களின் கையில் என்ற நோக்கத்திலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் இன்று  இக்கிராமங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நன்றாக படித்து அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்ல ஏதுவாக நூலகம் மற்றும் அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மயில்வாகனன் அவர்கள் துவங்கிவைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, கலவை காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 



    எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad