கடம்பூர் பேரூராட்சியில் தங்கம்மாள்புரம் பகுதியில் 27 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் தங்கம்மாள்புரம் பகுதியில் 27 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி தங்கம்மாள்புரம் இங்கு பல ஆண்டுகளாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைத்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து தரும் படி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களிடம் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் 27 லட்சத்தில் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் கழிவுநீர் பாதை சிதலமடைந்து இருப்பதை கண்ட அமைச்சர் அதனை ஆய்வு செய்து சரி செய்யுமாறு பேரூராட்சிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தங்கள் கோரிக்கையினை ஏற்று தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைக்க ஏற்பாடு செய்த அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில் உதவி செயற் பொறியாளர் அண்ணம், கடம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, கழகம் வாசமுத்துபாண்டியன், அம்மா பேரவை நகர கழக செயலாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை