• சற்று முன்

    அரக்கோணம், பாணாவரம் அருகே சமையல் செய்ய காஸ் சிலிண்டர் வெடித்து தொழிலாளி படு காயம்



    அரக்கோணம், பாணாவரம் அருகே சமையல் செய்ய காஸ் ஸ்டவ்வைபற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீடு இடிந்து, தொழிலாளி படு காயமடைந்த  சம்பவம் பரபரப்பை 
    ஏற்படுத்தியுள்ளது.


    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த ரங்காபுரம் பஜனைகோயில் தெருவில்வசிப்பவர் வேலுமணி (2), இவர் புலிவலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, கணவனிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இவர்களுக்கு குழந்தைகள்  இல்லை.வெடித்தது இதன் காரணமாக  வீட்டில் தனியாக வசித்து வந்த  வேலுமணி தானே சமைத்து சாப்பிட்டு வந்தார்

    இந்நிலையில் நேற்று மாலை  4 மணியளவில் சமையல் செய்வதற்காக காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். சிலிண்டரில் ஏற்கெனவே கசிவு  இந்த காரணத்தால் திடீரென தீ சிலிண்டர் முழுக்க பற்றி எரிய தொடங்கியது. இதை கண்டு பதட்டமடைந்த வேலுமணி வீட்டை விட்டு வெளியே  ஓடிவந்தார். ஆனால் அதற்குள்  சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர்கள்  இடிந்து விழுந்தது.

    இந்த  இடிபாடுகளில் வேலுமணி சிக்கிக் கொண்டார். இதை கண்ட  பொதுமக்கள்  விரைந்து வந்து படுகாயமடைந்திருந்த  வேலுமணியை  மீட்டு வாலாஜாஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சமையல் செய்ய முயன்றபோது காஸ் சிலிண்டர்விடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுளது

    எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad