கோவில்பட்டியில் அ. ம. மு க. சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வழங்கினார் .
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் காமராஜர் சிலை, முச்சந்தி செல்வ விநாயகர் கோவில் பகுதியில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 1,200 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான எஸ். வி. எஸ். பி. மாணிக்கராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சிவபெருமாள், நகரச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர;கள் மகேந்திரன், கணபதி பாண்டியன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை