திருப்பத்தூர் அருகே 13 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு! போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம், அனேரி பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் அரிஷ் (13) இன்று புலிக்குட்டை பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் தனது நண்பருடன் குளிக்கச் சென்று கால் இடரி ஆற்றில் விழுந்தது இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அரிஷ் உடலை கைப்பற்றி முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் அரிஷ் உடலை பரிசோதனை செய்ததில் கன்னம் கழுத்து தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டும் உடல் முழுவதும் மணல் துகள்கள் இருந்ததால் சந்தேகப்பட்டு மாணவன் இறந்துகிடந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
அப்போது போலீசாருக்கு உறவினர்கள் சம்பவ இடத்தை காட்டிய ஆற்றுப்படுகையில் கால் முட்டி அளவு தண்ணீர் மட்டும் இருந்ததால் இந்த இடத்தில் அரிஷ் உயிர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் உறவினர்கள் கூறும் ஒவ்வொரு வாக்குமூலமும் ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உள்ளதாகவும், அது மட்டுமின்றி அரிஷின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றவர் யார் என்றும் இதுவரை உறவினர்கள் தெரிவிக்கவில்லை எனக்கூறி போலீசார் தரப்பில் சந்தேகப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
போலீசார் மத்தியில் இச்சம்பவம் மணல் கடத்தலில் ஈடுபட்ட போது அரிஷ் குழியில் மாட்டிக்கொண்டு இறந்தாரா? மணல் கடத்தலில் ஈடுபட்டவர் யார் என்ற வண்ணத்தில் போலீசார் சந்தேகப்பட்டும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : நித்தியானந்தம்
கருத்துகள் இல்லை