திருப்பத்தூரில் சட்டமன்ற, நாடாளுமன்ற மேம்பாடு நிதியிலுருந்து கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்
திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் கொரணா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மருத்துவமனை நாட்றம்பள்ளி மற்றும் சமுதாய சுகாதார நிலையங்கள் குனிச்சி மற்றும் ஆண்டியப்பனூர்,புதுப்பேட்டை ஆகிய சுகாதார நிலையங்களுக்கு 20 லட்சம் மதிப்பிலான கொரானா நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
அதேபோல் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 69 லட்சத்திற்கான உயிர்காக்கும் கொரணா சிகிச்சை மருத்துவ உபகரணங்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
கருத்துகள் இல்லை