15 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்த போலீசார்
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் வீட்டில் 15 வயதான சிறுமி வீட்டு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி வேலைக்கு சென்ற போது பால்ராஜ் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக சிறுமியின் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை